ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 100-ஆக அதிகரிப்பு

Oct 18, 2018 12:18 PM 497

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜிகா வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ளது. ஜெய்ப்பூர் மாவட்டத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதல் ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனிடையே ஜெய்ப்பூரைச் சுற்றியுள்ள மற்ற மாவட்டங்களிலும் ஜிகா வைரஸ் பரவியுள்ளது. இதனால் ஜிகா தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது. 

ஜிகா வைரசால் கர்ப்பிணிப் பெண்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ குழுக்கள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comment

Successfully posted