நாளை 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!!

Aug 09, 2020 07:19 AM 609

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மறுகூட்டல் வாய்ப்பிற்கு பதிலாக, மதிப்பெண் சார்ந்த குறைகளுக்கு வரும் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை, குறை தீர்க்கும் படிவத்தினை பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted