கோவா கடற்பகுதியில் மாயமான கன்னியாகுமரி 11 மீனர்வர்கள்

Apr 25, 2021 01:54 PM 721

கோவா கடற்பகுதியில் மாயமான கன்னியாகுமரி மீனவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்க மத்திய-மாநில அரசுக்கு சக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 9 ஆம் தேதி 11 மீனர்வர்கள், வள்ளவிளையைச் சேர்ந்த ஜோசப் பிராங்க்ளின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கடந்த 23ம் தேதி கோவாவில் இருந்து 600 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

சக மீனவர்கள் மீன்பிடித்து விட்டு திரும்பும்போது, ஜோசப் பிராங்க்ளின் விசைப்படகு இரண்டாக உடைந்து கிடந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், வள்ளவிளையை சேர்ந்த உறவினர்களுக்கும், மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் படகு உடைந்த பகுதியில் மாயமானவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

மாயமான கன்னியாகுமரி மீனவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்க, மத்திய-மாநில அரசுகளுக்கு சக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted