எகிப்து நாட்டில் ரயில் தடம் புரண்ட கோர விபத்தில் 11 பேர் உயிரிழப்பு, 98 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Apr 19, 2021 08:08 AM 1609

எகிப்து நாட்டில் ரயில் தடம் புரண்ட கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 98 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எகிப்து நாட்டின் கலியுபியா மாகாணத்தில் உள்ள கைரோவில் இருந்து, நைல் டெல்டா பகுதியை நோக்கி, பயணிகள் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

நேற்று பிற்பகல் புறப்பட்ட இந்த ரயில், 40 கிலோ மீட்டர் சென்ற நிலையில் திடீரென 4 பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த கோர விபத்தில் ரயிலில் பயணித்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 98 பேர் மீட்கப்பட்டு, அருகே உள்ள 3 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக, எகிப்து அரசு தெரிவித்துள்ளது.

image

ஒரே வாரத்தில் இரண்டு ரயில்கள் தடம் புரண்டிருப்பதால், விபத்துகளுக்கு பொறுப்பேற்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் கமெல் அல்-வாசிர் பதவி விலக வேண்டுமென அந்நாட்டு மக்கள் சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

Comment

Successfully posted