என்.எல்.சி நிறுவன விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11ஆக அதிகரிப்பு!!

Jul 06, 2020 01:01 PM 396

கடலூரில் உள்ள என்.எல்.சி.நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கும் முன்பு இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள பாய்லர் வெடித்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 16 பேரில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Comment

Successfully posted