மதுரை மத்திய சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த 11 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை !

Oct 12, 2018 12:10 PM 933

மதுரை மத்திய சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த 11 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மத்திய சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் கைதிகள், நன்னடத்தை விதியின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே 201 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு பெண் கைதி உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மன மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். மதுரை சிறையில் இருந்து இதுவரை 213 பேர் விடுதலை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted