12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - 18 பேர் கைது

Jul 17, 2018 10:37 AM 789

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை  அதே குடியிருப்பில் பணிபுரியும், லிப்ட் ஆப்பரேட்டர் மற்றும் பிளம்பர் உள்ளிட்டோர் மிரட்டி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் முதற்கட்டமாக 4 பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து படிப்படியாக 18 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர், இந்நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட 18 பேரும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

 

Comment

Successfully posted