12 வயது மாணவி கண்டபேருண்டாசனம் செய்து சாதனை!

Oct 16, 2020 10:01 PM 1348

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 12 வயது மாணவி கண்டபேருண்டாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

சிங்கம்புணரியில் உள்ள தனியார் உடற்கல்வி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராகவர்த்தினி என்ற 7 ஆம் வகுப்பு மாணவி யோகாசனத்தில் மிகவும் கடினமான ஆசனமான கண்டபேருண்டாசனத்தை 15 நிமிடங்கள் நாற்காலிமேல் செய்து உலக சாதனை படைத்தார்.

இந்த நிகழ்ச்சி கோவை நோபல் வேர்ல்டு ரெக்கார்டு நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதுவரை கண்டபேருண்டாசனத்தை யாரும் 15 நிமிடங்கள் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted