12ஆம் நூற்றாண்டை சேர்ந்த  புத்தர் சிலை இங்கிலாந்தில் மீட்பு

Aug 16, 2018 01:00 PM 572
பீகார் மாநிலம் நாலந்தாவில் உள்ள தொல்வியல் ஆய்வு மையத்தில் இருந்து  57 ஆண்டுகளுக்கு முன்பு பழைமை வாய்ந்த புத்தர் சிலை ஒன்று கடத்தப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.  இந்தநிலையில் லண்டனில் இருந்து தற்போது அந்தச் சிலை மீட்கப்பட்டுள்ளது.  1961ஆம் ஆண்டு புத்தர் சிலை இங்கிலாந்துக்கு கடத்தி செல்லப்பட்டதாக  லண்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.  புத்தர்  சிலை விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted