உத்திரப்பிரதேசத்தில் பேருந்தும்-லாரியும் மோதி விபத்தில் 13 பேர் பலி

Feb 13, 2020 08:50 AM 306

ஃபிரோசாபாத்தில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் உள்ள ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் நேற்று இரவு வேகமாக வந்த சொகுசுப்பேருந்தும், லாரியும் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் பேருந்தில் பயணித்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  மேலும், காயமடைந்த 40 க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ஃபிரோசாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted