சென்னையில் கடைக்கு சென்ற 13 வயது மாணவி கடத்தல்

Mar 16, 2019 07:20 AM 42

சென்னையில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற 8 ஆம் வகுப்பு மாணவியை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்

அமைந்தகரை பகுதியை சேர்ந்த கவியரசன் என்பவரின் 13 வயது மகள் அங்குள்ள மேல் நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியின் அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.இந்த நிலையில் கவியரசன், வடமாநிலத்தை சேர்ந்த இருவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்த ஜாகிர் மற்றும் அவரது நண்பர் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியை தேடி போலீசார் பெங்களூர் சென்றுள்ளனர்

Comment

Successfully posted