சபரிமலையில் தரிசனத்திற்காக133 பெண்கள் ஆன்லைனில் பதிவு

Nov 15, 2019 07:05 AM 268

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய வழங்கிய முந்தைய தீர்ப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 133 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பெண்கள் வருவதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் கோயில் முழுவதும் 5 கட்டமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பம்பை, நிலக்கல், எருமேலி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வன்முறை நிகழலாம் என உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது

Comment

Successfully posted