சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஒரே நாளில் 139 பேர் பலி

Feb 15, 2020 10:06 AM 221

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் நேற்று ஒரே நாளில் 139 பேர் பலியாகினர்.

கோவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ், சீனாவில் வேகமாக பரவி வருகிறது. ஹூபே, வூகான் உள்ளிட்ட நகரங்களில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து ஐநூறை தாண்டியுள்ளது. நேற்று மட்டும் நான்காயிரத்து 823 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டுள்ள 51 ஆயிரத்து 986 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comment

Successfully posted