நடப்பாண்டில் இதுவரை 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது

Apr 19, 2019 08:58 AM 66

நடப்பாண்டில் இதுவரை 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும், பாரம்பரிய, கலாசார சிறப்புகளை கொண்ட வேளாண் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு, புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அப்பொருட்களை, அவற்றுக்கான சிறப்பு பெயருடன் வேறு யாரும் சந்தைப்படுத்த முடியாது. மேலும் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு, அதிக விலையும் கிடைக்கிறது.

இந்த வகையில் இந்தாண்டு, கேரளாவின், வயநாடு பகுதியில் விளையும் 'ரோபஸ்டா காபி, கர்நாடகாவின் கூர்க் பகுதியில் உற்பத்தியாகும் 'கூர்க் அரபிகா காபி உள்ளிட்ட 14 பொருட்களுக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் கருஞ்சீரகம், கந்தமால் மஞ்சள் ஆகியவையும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில், 2004ல், முதன் முறையாக, டார்ஜிலிங் தேயிலைக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. தற்போது, 344 பொருட்கள் இப்பட்டியலில் உள்ளன.

Comment

Successfully posted