பூட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை !

Oct 16, 2018 10:42 AM 326

சென்னை வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

வளசரவாக்கம் பாத்திமா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சேசன். இவர் தனது குடும்பத்தினருடன் மகாபுஷ்கரத்திற்கு சென்றிருந்தார். இந்தநிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட குடியிருப்புவாசி ஒருவர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் உள்ளே சேன்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. பீரோவில் இருந்த 15 சவரன் நகை களவாடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Comment

Successfully posted