15ம் நூற்றாண்டை சேர்ந்த கற்சிலைகள் கண்டெடுப்பு

Dec 04, 2021 12:58 PM 1559

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பூசிமலைகுப்பம் கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள 2 சிற்ப சிலைகளை, பொதுமக்கள் வணங்கி வழிபாடு நடத்தி வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளியின் ஆசிரியர் சரவணன், மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்காக சிற்ப சிலைகளை பார்வையிட்டார்.

image

இதையடுத்து அவர் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்று, வரலாற்று ஆய்வாளர் விஜயன் ஆய்வு நடத்தினார். 3 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட கற்சிலைகள், 15ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும், கற்சிலைகளுடன் அக்காலத்து வில் அம்பு, போர் வாள் இருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


Comment

Successfully posted