ஆந்திராவில் ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் வெட்டி கடத்தல் - தமிழர்கள் உள்பட 16 பேர் கைது

Nov 27, 2018 05:04 PM 441

கடப்பா அருகே 1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற தமிழர்கள் உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராகி ஜோட்டி பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பேபள்ளி, விராப்பள்ளி, சின்னமாண்டியம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியாக வந்த 2 சொகுசு காரை சோதனை செய்ததில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து செம்மரங்களை கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 12 பேர் உட்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Comment

Successfully posted