16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவர் போஸ்கோ சட்டத்தில் கைது

Oct 15, 2019 09:35 PM 138

கொடைக்கானல் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருவர் கிருஸ்தவ தேவாலயத்திற்கு சென்று தனது தம்பியுடன் வீடு திரும்பினார்.

அப்போது அவர் வரும் வழியில் பள்ளங்கி கோம்பை பகுதியைச் சேர்ந்த அந்தோணி பீட்டர் ராஜ் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.உடன் இருந்த சகோதரன் கூச்சலிட்டதையடுத்து அந்தோணி தப்பியோடிவித்ததாக கூறப்படுகிறது .பிறகு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து கொடைக்கானல் மகளிர் போலீசார் ராஜாவை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Comment

Successfully posted