17வகை இயற்கை பொருட்களால் பயோ பிளாஸ்டிக்கை தயாரித்த 12ம் வகுப்பு மாணவி

Dec 02, 2019 08:52 PM 619

12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், 17 வகையான இயற்கை பொருட்களை கொண்டு உயிரி நெகிழி எனப்படும் பயோ பிளாஸ்டிக்கை தயாரித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் அர்ச்சனா பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மட்கும் தன்மை வாய்ந்த பயோ பிளாஸ்டிக்கை தயாரிக்க முடிவு செய்தார்.

தன்னுடைய யோசனையை பள்ளி ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். அவருடைய முயற்சிக்கு பள்ளி ஆசிரியர் ஜெசி மற்றும் தலைமை ஆசிரியர் கருணாநிதி முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் உயிரி நெகிழி தயாரிக்கும் தன்னுடைய முயற்சியில் தீவிரமாக இறங்கினார் அர்ச்சனா.

மக்காச்சோளம் உள்ளிட்ட 17 வகையான இயற்கை பொருட்களை வைத்து பயோ பிளாஸ்டிக் என்ற உயிரி நெகிழியை தயாரித்துள்ளார். தன்னுடைய இந்தக் கண்டுபிடிப்பை கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் போட்டியில் பங்கு பெற செய்தார் அர்ச்சனா.நெகிழியை ஆய்வு செய்த அறிவியல் ஆய்வாளர்கள் மாணவியை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் மாணவியின் கண்டுபிடிப்பு மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளில் முதல் கண்டுபிடிப்பு என தேர்வு செய்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து மாணவி அர்ச்சனா தேசிய அளவில் நடைபெறும் அறிவியல் போட்டியிலும் கலந்துக் கொண்டு அவரது பயோ பிளாஸ்டி பையை இடம் பெற செய்ய உள்ளார்.

Comment

Successfully posted