17 நாட்களுக்கு பிறகு தி-நகரில் ஜவுளிகடைகள், நகைகடைகள் திறப்பு!!

Jul 06, 2020 02:12 PM 871

17 நாட்களுக்கு பிறகு சென்னை தி.நகர், பாண்டிபஜாரில் ஜவுளி கடைகள், நகைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மாதம் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஜவுளி கடைகள், நகை கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தபடுத்திய பின்னரே கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Comment

Successfully posted