அமெரிக்காவில் சூறாவளியினால் 18 பேர் உயிரிழப்பு, 46 பேர் மாயம்

Oct 15, 2018 02:26 PM 349

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை தாக்கிய சூறாவளியில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர் மேலும் 46 பேர் காணாமல் போயுள்ளனர்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சூறாவளி ஒன்று தாக்கியது. பனாமா நகர வனப்பகுதியில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இந்த சூறாவளியால் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுளனர். 46 பேர் காணமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில், 18 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனாமா நகரில் தொலை தொடர்பு சாதனங்களும், மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. அவற்றை சரி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Comment

Successfully posted