ஸ்ரீரங்கத்தில் ரூ.9 கோடி மதிப்பிலான 192 காசோலைகள் பறிமுதல்

Mar 15, 2019 07:56 PM 15

ஸ்ரீரங்கத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 9 கோடி மதிப்பிலான காசோலைகள் மற்றும் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான புரோ நோட்டுகள், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அடுத்த திருப்பராய்துறை தனி வட்டாட்சியர் சுமதி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த மகேந்திரா வாகனத்தை அவர்கள் சோதனையிட்டபோது, அதில் 8 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 192 காசோலைகளும், 50 மற்றும் 70 லட்சத்திற்கான புரோ நோட்டுகளும் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாகனத்தில் வந்த கண்ணன், மணி, பேச்சிமுத்து ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comment

Successfully posted