கொரோனா வைரஸ் பாதிப்பு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 2, 442 ஆக அதிகரிப்பு

Feb 23, 2020 11:54 AM 554


சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 442 உயர்ந்தது. இத்தாலியில் இந்நோய்க்கு 2 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள ஊகானில் உருவான கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. கோரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சீன சுகாதாரத்துறை திணறி வருகிறது.

இந்தநிலையில் கோரோனா பாதிப்பால் அந்நாட்டில், நேற்று மட்டும், 97 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 442 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று, 76 அயிரத்து 936 பேருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இத்தாலியில் 80-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று தென்கொரியாவில், 556 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted