மகாராஷ்டிரா அரசியலால் நாடாளுமன்ற பணிகள் 2 நாட்கள் பாதிப்பு

Nov 27, 2019 12:07 PM 383

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் காரணமாகக் கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தில் அலுவல்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த 2 நாட்களாகப் பாதிக்கப்பட்டன.

இன்று இரு அவைகளும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மக்களவையில் மின்னணு சிகரெட்டுகளுக்குத் தடை விதிப்பதற்கான சட்ட மசோதா, சிறப்புப் பாதுகாப்புக் குழு சட்டத் திருத்த மசோதா, தத்ரா நாகர்ஹவேலி, டையூ டாமன் ஆகிய ஒன்றிய ஆட்சிப் பகுதிகளை ஒன்றிணைப்பதற்கான மசோதா இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

இதேபோல், தேசியத் தலைநகரப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளின் சொத்துரிமையை அங்கீகரிப்பதற்கான மசோதா, வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா ஆகியன இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

Comment

Successfully posted