காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

May 12, 2019 10:50 AM 282

காஷ்மீர் மாவட்டம் சோபியானில் பாதுகாப்புப்படை நடத்திய என்கவுண்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சோபியான் மாவட்டத்தில் உள்ள ஹிந்த் சிதாபோரா எனுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பாதுகாப்பு படையினரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

நேற்று முன்தினம் இதே சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இஸ்பாக் அகமது என்பவர் சுட்டுகொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted