போலி பினாயில், கிருமி நாசினி தயாரித்த 2 பேர் கைது!

Mar 21, 2020 04:17 PM 982

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் போலி கிருமி நசினி திரவங்கள், கழிவறை சுத்திகரிப்பான், பினாயில் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருவதாக, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பல்வேறு பிரபலமான நிறுவனங்களின் பெயரில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, போலியான பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்ததை உறுதி செய்தனர். இதனை அடுத்து, சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஞான கிஷோர் ராஜ், ஜான் பெனடிக்ட் ஆகிய இருவரை கைது செய்தனர்.

Comment

Successfully posted