பிரபல டென்னிஸ் வீரர்களை போல் விளையாடும் 2 குழந்தைகள்

May 10, 2020 03:25 PM 5484

பிரபல டென்னிஸ் வீரர்களான ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மக்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவர்கள் இருவர் டென்னிஸ் விளையாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜப்பானை சேர்ந்த இரண்டு குழந்தைகள் பிரபல டென்னிஸ் வீரர்களான ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் விளையாடுவது போலவே டென்னிஸ் விளையாடி அசத்தியுள்ளனர். இந்த வீடியோ காட்சியை டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரேயின் தாய் ட்விட்டரில் பகிர்ந்ததுடன், குழந்தைகள் சிறப்பாக பயிற்சி மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

Comment

Successfully posted