ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் பலி

Feb 20, 2020 09:43 AM 227

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, 2 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 74 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முதன்முறையாக ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். குவாம் நகரை சேர்ந்த இருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் சீனாவை தவிர்த்து வெளிநாடுகளில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

Comment

Successfully posted