ஜம்மு-காஷ்மீர் ராணுவ வீரர்கள் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

Jun 13, 2020 12:33 PM 1076

ஜம்மு-காஷ்மீரில், ராணுவ வீரர்கள் நடத்திய என்கவுண்டரில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குல்காம் மாவட்டத்தில் இன்று காலையில் ராணுவ வீரர்களும், ஜம்முக்காஷ்மீர் காவல்துறையினரும் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நிபோரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், வீரர்களை நோக்கி சுடத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை அடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதே போன்று, ராணுவ வீரர்களும், ஜம்முக்காஷ்மீர் காவல்துறையினரும் இணைந்து, அனந்த்நாக் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு தீவிரவாதிகளுக்கும் வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

Comment

Successfully posted