கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது!!

Jul 16, 2020 06:02 PM 779

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் முகவரிக்கு வந்த 30 கிலோ கடத்தல் தங்கம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் அரசு ஊழியர் ஸ்வப்னா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில், மலப்புரத்தை சேர்ந்த முகமது அன்வர், சைதலாவி ஆகியோரை கொச்சி சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Comment

Successfully posted