சென்னை பாரிமுனையில் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

Dec 16, 2018 03:26 PM 434

சென்னை பாரிமுனை அருகே சாம்பார் பாத்திரத்தில் 2 வயது குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாரிமுனை ஸ்டிங்கர் தெருவை சேர்ந்தவர்கள் முருகன் - சூர்யா தம்பதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், 3 குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருந்தபோது, வீட்டின் அருகே விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சாம்பார் பாத்திரத்தில் முருகனின் 2-வது குழந்தை பூமிகா எதிர்பாராதவிதமாக விழுந்து படுகாயமடைந்தது. இதையடுத்து, கீப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பூமிகா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Comment

Successfully posted