2.0 படத்தின் 4வது மேக்கிங் வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!

Oct 02, 2018 11:40 AM 720

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் 4வது மேக்கிங் வீடியோ வெளியாகி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள படம் 2.0.

எந்திரன் படத்தின் 2ம் பாகமாக உருவாகியுள்ள 2.0 படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், கலாபவன் சஜான், ரியாஸ் கான், சுதன்சூ பாண்டே உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூன்று மேக்கிங் வீடியோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு வைரலாகின. இந்தநிலையில், 4வது மேக்கிங் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கிராபிக்ஸ் கலக்கலுடன் வெளியிடப்பட்டுள்ள காட்சிகள், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளன. இதனால், 2.0 திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Comment

Successfully posted