மேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி

Oct 22, 2019 06:53 AM 266

சேலம் மாவட்டம் மேட்டூரில் 421 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 கோடியே 86 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கப்பட்டது.

மேட்டூரை அடுத்த மேச்சேரி பகுதியில் திருமணம் உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர் செம்மலை கலந்து கொண்டு 421 பேருக்கு தாலிக்கு தலா ஒரு பவுன் தங்கமும், திருமண நிதியுதவியும் வழங்கினார். மொத்தம் 2 கோடியே 86 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை பெற்றுக்கொண்ட பெண்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இதில், அதிமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted