ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டது

Nov 29, 2018 02:53 PM 588

ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது


ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள 2.0 திரைப்படம் இன்று வெளியானது. இன்று அதிகாலை காட்சிகள் வெளியாகி ஒடிக்கொண்டிருந்த நிலையில், படம் பார்த்த சிலர் படத்தினை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளனர். மேலும் தியேட்டரிலிருந்து சிலர் பேஸ்புக்கில் லைவாக வெளியிட்டதால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது.

தற்போது அடுத்த அதிர்ச்சியாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் 2.0 படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் சார்பில் 12000 இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவை தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் இப்போது வேறு ஒரு டொமைனில் இருந்து ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted