2018 அதிகம் தேடியவை பட்டியலை வெளியிட்டது கூகுள்

Dec 14, 2018 08:41 PM 1744

இணைய தேடு பொறிகளில் உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துவது கூகுள். வருட வருடம் ஆண்டு முடியும் போது, அந்த ஆண்டிற்கான இயர் இன் சர்ச் (Year in Search) வெளியிடுவார்கள். அதே போன்று இந்த ஆண்டிற்கான இயர் இன் சர்ச் (Year in Search) தற்போது வெளியிட்டிருக்கிறது கூகுள் நிறுவனம். அந்த வகையில் இந்தியாவில் அதிகம் ட்ரெண்ட் ஆனா 9 முக்கிய பிரிவுகளில் இயர் இன் சர்ச் (Year in Search) கூகுள் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் ட்ரெண்ட் ஆனா விளையாட்டு பிரிவில்:

பிபா உலக கோப்பை, ஐ.பி.எல்., ஆசிய கோப்பை 2018, குளிர்கால ஒலிம்பிக்ஸ் உள்ளிட்டவை இடம்பிடித்துள்ளன.

 

குழந்தைகள் அதிகம் தேடியவை:

கூகுளில் குழந்தைகள் அதிகம் தேடியவற்றை பார்க்கும் போது பால் வீர் மற்றும் மோட்டு பட்லு முன்னிலையிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரோபோட் 2.0 திரைப்படம் உள்ளிட்டவை இடம்பிடித்து இருக்கின்றன.

 

படங்கள் வரிசையில்:

மார்வெல் வெளியிட்ட அவென்ஜர்ஸ்: இன்ஃபினிட்டி வார், பிளாக் பேந்தர் மற்றும் டெட்பூல் 2 உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன.

 

இசையை பொருத்த வரை :

நேஹா கக்கரின் தில்பார் தில்பார், அரிஜித் சிங்கின் தெரா ஃபிதூர் உள்ளிட்டவையும் ஆங்கில மொழி தேடலில் லத்தீன் மொழியில் வெளியாகி வைரலான டெஸ்பாசிட்டோ அதிகம் பேர் தேடி இருக்கின்றனர்.


2018இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியல்:

ப்ரியா பிரகாஷ் வாரியர், பிரியங்கா சோப்ராவின் கணவரான நிக் ஜோனஸ், சப்னா சௌத்ரி, பிரியங்க சோப்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

 

இதைத்தொடர்ந்து How to.., தேடல்களில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர், ஆதாருடன் மொபைல் நம்பரை இணைப்பது எப்படி? , ரங்கோலி போடுவது எப்படி? 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், பிட் காயின் முதலீடு செய்வது எப்படி? உள்ளிட்டவையும் தேடப்பட்டுள்ளது.


What is…’, தலைப்பில் சட்டப்பிரிவு 377, சிரியாவில் என்ன நடக்கிறது, கிகி சேலஞ்ச் என்றால் என்ன உள்ளிட்டவற்றை பெரும்பாலானோர் தேடியிருக்கின்றனர்.

Comment

Successfully posted