2021 ல் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு

Sep 01, 2018 05:13 PM 495

வரும் 2021 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. இதில் 2021ல் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த தகவலை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கோரிய சலுகைகள் குறித்த முடிவுகள் எடுக்க மத்திய அரசு இத்தகைய கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதிகளின் அடிப்படையில் கணக்கெடுப்புகளை தவிர்க்கும் நோக்கத்தில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிக உயர்ந்த வடிவமைப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

Comment

Successfully posted