2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் சின்னம் வெளியீடு

Jul 23, 2018 01:29 PM 750

வரும் 2020ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதனையொட்டி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான சின்னத்தையும், படத்தையும் ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டது. அதில் நீல நிறத்திலான கற்பனை பாத்திரம் இடம் பெற்றுள்ளது. அதன் கையில் மரைடோவா (Miraitowa) என பெயர் சூட்டிய பதாகை ஏந்தியபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. மரைடோவா என்பது ஜப்பானிய மொழியில் எதிர்கால சாத்தியம் என்பது பொருள். அதேபோல பாரா ஒலிம்பிக் போட்டிக்கான சின்னமும் வெளியிடப்பட்டது. அதில் இளஞ்சிவப்பு நிறத்திலான கற்பனை கதாபாத்திரம் சொமெய்டி (Someity ) எனும் பதாகையுடன் நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் 2020ஆம் ஆண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted