தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்க்கு பாராட்டு

Dec 15, 2019 04:41 PM 614

21வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு, திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் பாராட்டுச் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.

கடந்த 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை, மலேசியாவில் நடைபெற்ற 21வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், தமிழகத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில், பல்வேறு போட்டிகளில் 33 பேர் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் சுசீந்திரன், வெற்றியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், இவர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கி உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

Comment

Successfully posted