தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 227 நீதிமன்றங்கள் திறப்பு- அமைச்சர் சி.வி.சண்முகம்

Dec 08, 2019 01:39 PM 266

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 6 போக்சோ நீதிமன்றங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில், கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ன் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சி.வி சண்முகம், ஒரு மாநிலத்தில் நீதித்துறை சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் அந்த நீதித்துறையின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 227 நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு, வழக்குகளை விரைவாக முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட செய்து வருவதாகக் கூறினார்.

பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக அனைத்து மாநிலங்களிலும், போக்சோ நீதிமன்றங்களை தொடங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் 6 போக்சோ நீதிமன்றங்கள் இயங்கி வருவதாக அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

Comment

Successfully posted