24 ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம்

Nov 22, 2019 04:09 PM 632

அதிமுக-வின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், அவைத் தலைவர் மதுசூதணன் தலைமையில் 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுகவில் செயற்குழு உறுப்பினர்களாக, தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், பிற மாநிலத்தின் கழக செயலாளர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக செய்தி தொடர்பாளர்கள், என சுமார் 370 முக்கிய நிர்வாகிகள் செயற்குழுவில் இடம்பெறுவார்கள்.

பொதுக்குழுவில், பொதுக்குழு உறுப்பினர்கள், அவைத் தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி செயலாளர்கள், பிற மாநில நிர்வாகிகள், மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் 100க்கும் மேற்படாத அளவில் நியமனம் செய்யப்படும் பொதுக்குழு உறுப்பினர்கள் என சுமார் 2 ஆயிரம் பேரும் பொதுக்குழுவில் இடம்பெறுவர்.

இவர்களைத் தவிர, சிறப்பு அழைப்பாளர்களாக, மாநில சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் பிரிவு செயலாளர்கள் மற்றும் போக்குவரத்துக்கழக செயலாளர்கள், சார்பு அமைப்புகளின் 17 பிரிவில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள், பிற மாநில சார்பு அமைப்புகளின் அணிசெயலாளர்கள், பிற மாநிலங்களின் மாவட்ட, தொகுதி, நகரக்கழகச் செயலாளர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் தேர்வு செய்யப்படும் கழக பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினர், அதிமுக ஒதுங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் ஒப்புதல் அளிக்கப்பட்டவர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் சிறப்பு அழைப்பாளர்கள் என்ற அந்தஸ்தில் பொதுக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு நான்காயிரத்திற்கும் அதிகமான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ள நிலையில் கூட்டம் நடைபெறவும் வானகரம் விழாகோலமாக மாறவுள்ளது.

Comment

Successfully posted