காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி 26 லட்ச ரூபாய் மோசடி

Oct 31, 2019 05:36 PM 131

காற்றாலை மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துக் கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறிக் கோவையில் 26 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக சரிதா நாயர், அவர் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோவை ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி கண்ணன் இன்று தீர்ப்பளித்தார். அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. சரிதா நாயருக்கும் அவர் கணவர் பிஜு ராதாகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டு சிறைத்தண்டனையுடன் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Comment

Successfully posted