கேரளாவிலிருந்து சென்னைக்கு மூட்டை கட்டி கொண்டு வரப்பட்ட ரூ.27 லட்சம் பணம்

Dec 13, 2019 06:18 PM 205

கேரளாவிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்தில் வந்த பயணியிடமிருந்து மூட்டை மூட்டையாக 27 லட்சம் ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலத்திலிருந்து தனியார் பேருந்து மூலம் சென்னை வந்த ஐயப்பன் என்பவர் அசோக் நகர் அருகே பேருந்திலிருந்து இறங்கினார். அப்போது தனது காரை வரவழைத்து பேருந்திலிருந்து மூட்டை மூட்டையாக பணத்தை இறக்கினார். அப்போது அவ்வழியே ரோந்து பணி மேற்கொண்ட திருவான்மியூர் சரக உதவி ஆணையர் ரவி தலைமையிலான காவல்துறை அவர்களை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொச்சினில் உள்ள வங்கி ஒன்றில் 27 லட்சம் ரூபாயை 10 ரூபாய் நோட்டுகளாகவும், நாணயங்களாகவும் மாற்றி இங்குள்ள வணிக நிறுவனங்களுக்கு கமிஷன் அடிப்படையில் கொடுப்பதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால் ஐயப்பன் மற்றும் கார் ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த காவல்துறையினர் பணத்தை வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Comment

Successfully posted