ராமேஸ்வரம் மீனவர்கள் 27பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Aug 11, 2018 11:37 AM 931
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டினார்.  தமிழக மீனவர்கள் 27 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.  கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மீது புதிய மீன்பிடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  4 படகுகளுடன் கைதான மீனவர்கள் 27 பேரும் தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. காற்றின் வேகம்  அதிமாகக இருந்ததால் எல்லைத் தாண்டி சென்று விட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Comment

Successfully posted