ஃபேஸ்புக்கில் 275 மில்லியன் போலி கணக்குகள்: சோஷியல் நெட்வொர்க் சைட் தகவல்

Feb 15, 2020 08:18 AM 245

பேஸ்புக்-கில் 275 மில்லியன் போலியான கணக்குகள் இருக்கலாம் என சோஷியல் நெட்வர்க்கிங் சைட் தகவல் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களால் அதிகம் விரும்பிப் பயன்படுத்தப்படுவது பேஸ்புக். இதில், 2.5 பில்லியன் பேர் கணக்கு வைத்துள்ளனர். கடந்தாண்டு இருந்த பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இது 8 சதவீதம் அதிகம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா நாடுகளில் உள்ள பயனாளர்களால், பேஸ்புக் அதிக வளர்ச்சி அடைந்ததாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், சோஷியல் நெட்வொர்க்கிங் சைட் என்ற அமைப்பின் ஆண்டறிக்கையில், பேஸ்புக்-கில் 275 மில்லியன் போலி கணக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

Comment

Successfully posted