செம்மரம் வெட்டிக் கடத்திய 29 பேர் கைது

Oct 25, 2018 12:14 PM 489

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடத்தப்பட்ட சோதனையில், செம்மரங்களை வெட்டிக் கடத்திய 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி ராமகிருஷ்ணா, செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு தனிப்படை அதிகாரிகள் வெவ்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையில், செம்மரம் கடத்திய 29 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 27 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், கேரளாவை மற்றும் நெல்லூரை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 செம்மரக்கட்டைகள், ஒரு மினி லாரி, 2 கார்கள், 24 செல்போன், 14 ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Comment

Successfully posted