2வது நாளாக கோவையின் 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

Jun 13, 2019 12:11 PM 115


பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்யப்பட்ட நிலையில், கோவையில் 2வது நாளாக 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று கொழும்பு நகரில் தேவாலயம், மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமான பயங்கரவாத கும்பலுடன் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்யப்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 2வது நாளாக கோவையின் 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Comment

Successfully posted