சங்ககிரி அருகே 2-வது நாளாக ஓடும் ரயில்களில் பயணிகளிடம் கொள்ளை

May 05, 2019 09:43 PM 316

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 2-வது நாளாக, ஓடும் ரயில்களில் பயணிகளிடம் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் - ஈரோடு மாவட்டங்களிடையே உள்ள சங்ககிரி வைகுந்தம் பகுதிகளில் ரயில்வே பாலம் பணிகள் நடைப்பெற்று வருவதால் அனைத்து பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மெதுவாக கடந்து செல்கின்றன. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரயிலில் பயணித்த பெண்களிடம் தொடர்ந்து 2-வது நாளாக நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் 4 எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்த வழக்கு, ஈரோடு ரயில்வே காவல்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது, ரயில்வே போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சேலம் மற்றும் ஈரோடு ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted