எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அசுரனின் 2வது லுக் போஸ்டர்

Aug 22, 2019 08:16 PM 380

நடிகர் தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க எழுத்தாளர் பூமணி எழுதிய “வெக்கை” நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் திரைப்படம் “அசுரன்”. இந்த படத்தை பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படத்தை தொடர்ந்து 4வது முறையாக வெற்றி மாறன் இயக்கியுள்ளார். அப்பா- மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கும் தனுஷ்க்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியான நிலையில் படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இலக்கிய பிரியர்களும் இந்த படத்தை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் அசுரன் படத்தின் இரண்டாவது போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளன. இதில் இளமையான தோற்றத்தில் தனுஷ் இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. முதல் போஸ்டரை போலவே இரண்டாவது போஸ்டரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதுகுறித்த ட்வீட்டர் ஹேஸ்டேக்குகளும் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளன.

 

Comment

Successfully posted