3வது முறையாக அதிபராகும் நம்பிக்கை உள்ளது -இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே

Aug 20, 2018 03:28 PM 204

இலங்கையில் இரண்டு முறை அதிபராக இருந்தவர் மகிந்த ராஜபக்சே. மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதையடுத்து, இலங்கை அதிபராக பதவியேற்ற மைத்ரிபால சிறிசேனா, இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவியை வகிக்க முடியும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். இந்தநிலையில் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, மூன்றாவது முறையாக அதிபராக முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். இதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும், அதில் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

 

 

Comment

Successfully posted