ராஜஸ்தானில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 3 எம்.எல்.ஏக்கள்

Nov 19, 2018 10:33 AM 190

ராஜஸ்தானில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ கட்சியில் இருந்து விலகினார்.

டிசம்பர் 7-ம் தேதி ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பா.ஜ.க. அமைச்சராக இருந்த தருண் ராய் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகினார். தொடர்ந்து, நாகாவூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் பா.ஜ.க.வில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்ட மேலும் சில பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் தனித்து போட்டியிடப் போவதாக எச்சரித்தனர்.

இந்நிலையில், ராம்கர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ ஞான் தியோ அகுஜா பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதால், தனித்து போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

Comment

Successfully posted